இந்தியா

சைபர் குற்றங்களை தடுக்க ரோபோ போலிஸை நிறுவிய ஆந்திர காவல்துறை!

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் சைபர் குற்றங்களை தடுப்பதற்காக ரோபோ போலிஸ் நிறுவப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்களை தடுக்க ரோபோ போலிஸை நிறுவிய ஆந்திர காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திர மாநிலத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அது தொடர்பான புகார்களுக்கு தனிப்பிரிவுகளை ஒதுக்கியுள்ளது அம்மாநில காவல்துறை.

இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிபேட்டா காவல் நிலையத்தில் சைபர் குற்றங்கள் குறித்த புகார்களை பதிவு செய்வதற்காகவே ரோபோ போலிஸ் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

சைபர் புகார்களை உடனே பெற்றுக்கொண்டு அதற்கான தீர்வுகளையும் அனைத்து உயரதிகாரிகளுக்கு இந்த ரோபோ அனுப்பி வைக்கிறது. இதனை எவர் வேண்டுமானாலும் அணுகி புகார் தெரிவிக்கலாம். மேலும், இந்த ரோபோவுக்கு "CYBIRA (cyber security interactive robotic agent)" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போலிஸ் ரோபோவை, ரோபோ கப்ளர் என்ற தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது காவல் நிலையத்தின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆந்திர போலிஸாரின் இந்த புதிய முயற்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories