இந்தியா

அயோத்தி தீர்ப்பு - சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு!

அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி தீர்ப்பு - சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அந்த தீர்ப்பில், வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட முழு உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

மேலும், 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளை அமைத்து கோயில் கட்டுவதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு செய்யமாட்டோம் என சன்னி வஃபு வாரியம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

அயோத்தி தீர்ப்பு - சீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு!

இந்நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய (ஏ.ஐ.எம்.பி.எல்.பி) தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பாபர் மசூதி நடவடிக்கை குழு, அசாதுதீன் ஒவைசியின் கட்சி, ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் உள்ளிட்ட அமைப்புகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன.

கூட்டத்தில், அயோத்தி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கம் தரும் 5 ஏக்கர் நிலத்தை பெற வேண்டாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சீராய்வு மனுவை முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மூலம் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories