இந்தியா

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் நஷ்டத்தை சந்தித்த வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள்?- அதிர்ச்சி தகவல்!

இதுவரை காணாத அளவிற்கு வோடஃபோன் - ஏர்டெல் நிறுவனங்கள் நஷ்டமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் நஷ்டத்தை சந்தித்த வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள்?- அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் முன்னணியில் செயல்பட்டுவந்தன. இந்தியாவில் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக தொலைத்தொடர்புத் துறையில் காலடி வைத்ததிலிருந்து மேற்கண்ட இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர் குறைந்து நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்தது.

இதனால், ஒவ்வொரு காலாண்டும் கடும் வருவாய் இழப்பைச் சந்தித்துவந்த ஏர்டெல் நிறுவனம் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. அதைவிட அதிகமாக, வோடஃபோன் நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக மத்திய அரசு கொண்டுவந்த புதிய தொலைத்தொடர்பு கொள்கையின் படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் குறிப்பிட்ட பகுதி தொகையை மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வோடஃபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் கடும் எதிரிப்பு தெரிவித்தன. மேலும் செலுத்தவேண்டிய தொகையையும் செலுத்தாமல் காலம் கடத்தி வந்தன.

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் நஷ்டத்தை சந்தித்த வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள்?- அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில் ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையை ஒப்படைக்கும்படி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “மத்திய அரசுக்கு அந்நிறுவனங்கள் 92,641 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்” என கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வோடஃபோன்-ஐடியா நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 50,921 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் அளவுக்கு சரிந்தன. ஏர்டெல் 23,045 கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் தான் கடும் நிதி நெருக்கடியை தங்கள் நிறுவனம் சந்தித்துள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் தொகையை செலுத்த விதிக்கப்பட்ட காலஅவகாசத்திற்குள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக வோடஃபோன்-ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ரூ.990 கோடி லாபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories