இந்தியா

“என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் அவ்வளவுதான்” - மிரட்டல் விடுக்கும் நீரவ் மோடி!

இந்தியா சென்றால் எனக்கு நியாயம் கிடைக்காது என நீரவ் மோடி கூறியுள்ளார்.

“என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் அவ்வளவுதான்” - மிரட்டல் விடுக்கும் நீரவ் மோடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார்.

நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அவரது சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19ம் தேதி அவரை லண்டன் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

“என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் அவ்வளவுதான்” - மிரட்டல் விடுக்கும் நீரவ் மோடி!

லண்டன் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுக்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவும் தொடர்ந்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த முயற்சித்து வருகிறது. இந்நிலையில், ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார் நீரவ் மோடி.

நேற்று (புதன்கிழமை) இந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிபதி, மோடியை வெளியே விட்டால் தன் மீதான குற்றச்சாட்டுகளின் ஆதாரங்களை அழித்துவிடுவார் என்பதால் ஜாமீன் தர முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

“என்னை இந்தியாவுக்கு அனுப்பினால் அவ்வளவுதான்” - மிரட்டல் விடுக்கும் நீரவ் மோடி!

ஜாமீன் மனுவுடன் அளிக்கப்பட்ட கடிதத்தில், ஜெயில் கைதிகள் என்னுடைய அறைக்குள் வந்து இதுவரை மூன்று முறை மோசமாக தாக்கி இருக்கிறார்கள். எனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும். என்னால் இந்தியாவிற்குச் செல்ல முடியாது.

இந்தியாவில் நியாயமான முறையில் விசாரணை நடக்காது. நான் இங்கேயே இருக்கிறேன். இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது என்று நீரவ் மோடி கூறியுள்ளார்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு மே 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது.

banner

Related Stories

Related Stories