இந்தியா

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை; விதிகளை மீறிய பாஜக தலைவருக்கு அபராதம்: டெல்லி போலிஸ் அதிரடி!

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பட்டுவரும் நிலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய வழக்கில் டெல்லி பா.ஜ.க-வின் முன்னாள் தலைவருக்கு போலிஸார் 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை; விதிகளை மீறிய பாஜக தலைவருக்கு அபராதம்: டெல்லி போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் முதல் வழக்கத்திற்கு மாறாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடும் புகைமூட்டத்துடன் காணப்பட்டுகிறது. இந்நிலையில் அந்தப்பகுதியில் காற்றின் தர அட்டவணை 625 என்ற அளவை எட்டியது. அதாவது 50 என்ற அளவு தரம் வாய்ந்ததாகவும், அதிகபட்சம் 200 என்ற அளவு மிதமானதாகவும் கருதப்படுகிறது.

ஆனால், டெல்லியில் தற்போது காற்றின் தர அளவு பன்மடங்கு உயர்ந்து 625 என்ற அளவை அடைந்ததால், மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இத்தகைய பாதிப்புகளினால் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்னைகளை டெல்லிவாழ் மக்கள் சந்தித்துவருகின்றனர்.

இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது. முதலில் விவசாயிகள் சருகுகளை எரிப்பதாலேயே அதிகளவில் மாசு ஏற்படுகிறது எனக் கூறி விளை நிலங்களில் உள்ள சருகுகளை எரிக்க தடை வித்தது.

அதனைமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது. இந்நிலையில் விதிகளை மீறியதாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது வழக்குபதிவு அபராதம் விதித்துள்ளது.

விஜய் கோயல்
விஜய் கோயல்

அதேப்போல், டெல்லி மாநகர சாலைகளில் இயக்கப்படும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நாள்தோறும் இயக்கப்படும் கார்களை அவற்றின் பதிவு எண்களைக் கொண்டு, ஒருநாளைக்கு ஒற்றை இலக்கு பதிவெண் கொண்ட வாங்களும், மறுநாள் இரட்டை இலக்கு பதிவெண் கொண்ட வாகனங்களும் இயக்கப்படவேண்டும் கூறியிருந்தனர். மேலும் நவம்பர் 15-ம் தேதி வரை இது அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் இரட்டை இலக்கு வாகனங்களுக்கு அனுமதியளித்தனர். ஆனால் அந்த விதிகளை மதிக்காமல், தனது ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட காரை, டெல்லி மாநில முன்னாள் பா.ஜ.க தலைவர் விஜய் கோயல் ஓட்டிச் சென்றார். இதனைப்பார்த்தப் போக்குவரத்து போலிஸார், விஜய் கோயல் ஓட்டிவந்த வாகனத்தை வழிமறித்து போக்குவரத்து விதியை மீறிவிட்டதாகக் கூறி, 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

முன்னதாக வாகனத்தை நிறுத்தியதற்கு போலிஸாருடன் விஜய் கோயல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் டெல்லி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், விஜய் கோயலுக்கு விதிமுறையை பின்பற்றும்படி பூச்செண்டு கொடுத்து வேண்டுகோள் விடுத்தார்.

banner

Related Stories

Related Stories