இந்தியா

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யா திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது - சிவன் பேட்டி

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யா திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யா திட்டத்திற்கு வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது - சிவன் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய ஊழியர்களுக்கிடையே தற்போது விளையாட்டு போட்டிகள் மகேந்திரகிரியில் நடந்து வருகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி செல்கிறேன். சந்திராயன்-2 செயற்கை கோளின் ஆர்பிட்டர் நன்றாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

அதிலிருந்து பேலோட்ஸ் எல்லாம் சரியாக இயங்கி கொண்டு இருக்கிறது. அடுத்ததாக வருகிற நவம்பரில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை ஏவும் திட்டம் உள்ளது. "ககன்யா" திட்ட வேலைகள் நல்லபடியாக நடந்து வருகிறது.

ககன்யா திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வுசெய்யப்படும் வீரர்கள் ரஷ்யாவிற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். ககன்யா திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு பரிசோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தற்போது கிரையோஜெனிக், செமி கிரோயோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் உள்பட புது, புது ராக்கெட் என்ஜின்களை வடிவமைக்கும் திட்டம் உள்ளது. மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டுவரவுள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories