இந்தியா

ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடி : இந்தியா சந்திக்கும் பாதிப்பு என்ன? - அதிர்ச்சி தகவல்!

ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியாவுக்கு மரண அடி விழும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடி : இந்தியா சந்திக்கும் பாதிப்பு என்ன? - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசால் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது. தொழில் துறை உற்பத்தியில் நாட்டின் 8 முக்கிய துறைகளின் உற்பத்தி கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.

அதனால் வேலை வாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 6.1 சதவிதமாக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நிர்ணயித்த ஜி.எஸ்.டி வரி வருவாய் இலக்கை அடையமுடியாமலும், பொருளாதார மந்தநிலையை சீர்படுத்த முடியாமலும் கடும் சவால்களை சந்தித்து வரும் மத்திய பா.ஜ.க அரசு, மேலும் சிக்கலுக்குள் இந்தியாவை சிக்கவைக்க முயற்சி செய்கிறது. இதன் மூலம் இந்திய நாட்டு மக்கள் மற்றொரு சவாலைச் சந்திக்க வேண்டியுள்ளது.

அது என்னவெனில், ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் 16- வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து 14-வது கிழக்கு ஆசியா மாநாடு மற்றும் 3-வது பிராந்திய பொருளாதார மாநாடும் நடைபெறுகிறது.

ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடி : இந்தியா சந்திக்கும் பாதிப்பு என்ன? - அதிர்ச்சி தகவல்!

இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளான புருனை, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பின்ஸ், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகள் உள்ளன. இவற்றுடன் 6 தடையில்லா வர்த்தக உடன்பாடு செய்துள்ள நாடுகளான இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆசிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த 16 நாடுகளும் தங்களுக்குள் தடையில்லா வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, ‘‘பிராந்திய விரிவான பொருளாதார பங்காண்மை’’ என்ற திட்டத்தை 2012–ம் ஆண்டு கம்போடியாவில் நடந்த மாநாட்டில் உருவாக்கின.

இதன் மூலம் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற 15 நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கவும், அன்னிய செலாவணி கையிருப்பும் மேம்படும் எனக் கூறுகின்றனர். ஆனால், சீனா போன்ற நாடுகள் இந்திய சந்தையை அதிகம் ஆக்கிரமிக்கக்கூடும் என்பதே உண்மை நிலவரம்.

குறிப்பாக, சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு பொருட்கள் இறக்குமதியாகும்போது, இந்தியாவில் அதிகமான உற்பத்தி செலவில் தயாரிக்கப்படும் பொருகள் அதோடு போட்டிபோட முடியாது. அதேபோல நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் குறைந்த விலையில் பால் பொருட்களை இங்கு கொண்டுவரும்போது, இங்குள்ள பால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும்.

ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மோடி : இந்தியா சந்திக்கும் பாதிப்பு என்ன? - அதிர்ச்சி தகவல்!

இதனால் 7 கோடியே 30 லட்சம் பால் உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள். அதேபோல், வாகன உற்பத்தி, ஜவுளி மற்றும் விவசாயம் போன்ற பல தொழில்கள் கடும் பாதிப்புகளை சந்திக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், “நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சரி செய்யாமல், தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதிலும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதிலும் பிரதமர் மோடி தீவிர ஆர்வம் காட்டுகிறார். இந்தியப் பொருளாதாரமே முற்றுகைக்கு ஆளாகியிருப்பது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில், இதுபோதாதென்று, தாய்லாந்தில் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகம் நடைபெறுவதற்கான பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (ஆர்.சி.இ.பி) கையெழுத்திட மத்திய பா.ஜ.க அரசு தயாராக இருக்கிறது. இதனால் விவசாயம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கும். இதனால் இந்தியாவிற்கு மரண அடி விழும்” என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

banner

Related Stories

Related Stories