இந்தியா

13 லட்சம் இந்தியர்களின் கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனை : அதிர்ச்சியில் வங்கிகள்!

சுமார் 13 லட்சம் இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 லட்சம் இந்தியர்களின் கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனை : அதிர்ச்சியில் வங்கிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிங்கப்பூரைச் சேர்ந்த குரூப் - ஐபி என்ற பாதுகாப்பு ஆராய்ச்சிக் குழு சமீபத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய சைபர் கிரைம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் திருடப்பட்ட தகவல்களை வைத்துக்கொண்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவெனில் ஹேக் செய்யப்பட்ட தகவல்களில் 98 சதவீதம் இந்தியர்களின் தகவல் என குறிப்பிட்டுள்ளது. குரூப் - ஐபி நிறுவனம் கூறுகையில், ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் என்ற நிழல் உலக சந்தையில் சைபர் குற்றவாளிக்கு தேவையான தகவல்கள் இடம் பெறுவது வழக்கம்.

இந்நிலையில், ஜோக்கர்ஸ் ஸ்டாஷ் என்ற அந்தச் சந்தையில் தான் 13 லட்ச இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களைக் கொண்டு போலி கார்ட் தயாரிக்கவும் ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்திட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த சந்தையில் ஒவ்வொரு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரமும் தலா 100 அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பில் மொத்த விவரங்களும் 920 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 லட்சம் இந்தியர்களின் கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனை : அதிர்ச்சியில் வங்கிகள்!

மேலும் ஏ.டி.எம் இயந்திரம் போன்ற இடங்களில் கார்டுகளை பயன்படுத்தும் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்கிம்மர் கருவி மூலம் இந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ‘குரூப் ஐபி’ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ‘குரூப் ஐபி’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இலியா சச்கோவ் தெரிவிக்கையில், “கடந்த 12 மாதங்களில் இந்தியாவைச் சேர்ந்த வங்கிகளின் கார்டு விவரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால் இதனை வங்கிகள் கண்டுபிடிக்காத நிலையில் நாங்கள் கண்டறிந்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவித்துள்ளோம்.

குறிப்பாக விற்பனைக்கு வெளியாகியுள்ள வங்கி விவரங்களில் 18 சதவிகித கார்டுகள் ஒரே ஒரு இந்திய வங்கியைச் சேர்ந்தது. அதேபோல் மற்ற வங்கிகளின் கார்டு விவரங்களும் கிடைக்கின்றது. இது முழுக்க முழுக்க பாதுகாப்பு குளறுபடியாகவே பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது, அதில், “வாடிக்கையாளர்களின் தரவுகள் மீது சைபர் தாக்குதல் நடைபெற்றது உண்மை என்று கண்டறியப்பட்டால், அந்த வாடிக்கையாளர்களின் கார்டுகளை ரத்து செய்துவிட்டு புதிய கார்டை அவர்களுக்கு வழங்கவேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகவல்களைப் பாதுகாக்க நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories