இந்தியா

ஆந்திரா வங்கியில் 17 கிலோ தங்க நகைகள் கொள்ளை: விசாரணையில் சிக்கிய வங்கி அதிகாரி - அதிர்ச்சி தகவல்!

சித்தூர் அருகே ஆந்திரா வங்கி கொள்ளை சம்பவத்தில் வங்கியின் நகை மதிப்பிட்டாளரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆந்திரா வங்கியில் 17 கிலோ தங்க நகைகள் கொள்ளை: விசாரணையில் சிக்கிய வங்கி அதிகாரி - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திரா மாவட்டம் மோர்தனபல்லியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திரா வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 14-ம் தேதி லாக்கரில் இருந்த 17 கிலோ தங்க நகைகள், 2.66 லட்சம் ரொக்கம் மற்றும் சிசிடிவி கேமராவின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டர் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து வங்கி மேலாளர் யாதமரி போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலிஸார் சோதனை மேற்கொண்டனர். மேலும் வங்கி மேலாளர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதனையடுத்து நடைபெற்ற விசாரணையின் போது, வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரமேஷை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று போலிஸார் விசாரித்துள்ளனர்.

ரமேஷ்
ரமேஷ்

அப்போது, ரமேஷ் தான் நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலிஸார் நேற்று ரமேஷை கைது செய்தனர். மேலும் விசாரணையில் ரமேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து பேசிய போலிஸ் அதிகாரி, “நகை மதிப்பீட்டாளராக ஆந்திரா வங்கியில் ரமேஷ், கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலை செய்துவருகிறார்.

அதுமட்டுமல்லாமல், ரமேஷ் பங்குசந்தைகளில் தனது பணத்தை முதலீடு செய்து சம்பாதித்து வந்துள்ளார். அதில், திடீரென ஏற்பட்ட நஷ்டத்தால் இத்தகைய கொள்ளை முயற்சியில் ரமேஷ் இறங்கியுள்ளார்.

மேலும், நகைகளை அடமானம் வைக்க வங்கிக்கு வரும் வடிக்கையாளர்களின் பெயர் ஆவணங்களைப் பயன்படுத்தி, போலி நகைகளை அடமானம் வைத்து 1 கோடியே 30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தையும் பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வங்கி மேலாளர் விடுப்பில் சென்ற போது வங்கியில் லாக்கர் சாவியை பொறுப்பு மேலாளரிடம் கொடுக்கும் படி ரமேஷிடன் கொடுத்துள்ளனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட ரமேஷ், வேலூருக்குச் சென்று, வங்கி சாவியைப் போன்று கள்ளச் சாவி ஒன்றை தயாரித்து வாங்கியுள்ளார்.

அதேப்போல் வங்கி லாக்கரின் மாஸ்டர் சாவியை கணக்காளர் தனது இருக்கையில் வைத்து விட்டுச் செல்லும் போது அதன் அச்சை திருடி மற்றொரு கள்ளச் சாவியையும் ரமேஷ் தயார் செய்துள்ளார். பின்னர் விடுமுறை தினத்திற்கு வங்கிக்குச் சென்று, அங்குள்ள லாக்கரில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளார்.

மேலும் சிசிடிவி காட்சிகளில் மாட்டிக்கொள்வோம் என எண்ணி, அதுவரை பதிவாகியிருந்த சிசிடிவி கேமராவின் டிஜிட்டல் வீடியோ ரிக்கார்டரையும் எடுத்துச் சென்றுள்ளார். மேலும், வங்கியில் இருந்து கொள்ளையடித்த 17 கிலோ தங்க நகைகளை தங்க கட்டிகளாகவும், 2.66 லட்சம் ரொக்கம், கார், 2 பைக்குகள், வங்கி சிசிடிவி கேமரா ரெக்கார்டர் ஆகியவற்றை போலிஸார் பறிமுதல் செய்தனர்.

banner

Related Stories

Related Stories