இந்தியா

ஆற்றில் விழுந்த காரிலிருந்து 5 மாத குழந்தையை பாலத்தில் தூக்கி வீசிய சம்பவம் : அதிர்ச்சி வீடியோ!

மத்திய பிரதேசத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்த காரில் இருந்து 5 வயது குழந்தையை காப்பாற்ற பாலத்தின் மீது தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் விழுந்த காரிலிருந்து 5 மாத குழந்தையை பாலத்தில் தூக்கி வீசிய சம்பவம் : அதிர்ச்சி வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பிரதேசத்தில் டிக்கமர் மாவட்டதில் உள்ள ஒர்ச்சா கிராமத்தில் உள்ள பாலத்தின் மீது கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோவின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய கார் ஆற்றின் தடுப்பு கம்பிகளை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.

அந்த காரில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். கார் ஆற்றுக்குள் விழுந்தவுடனே அருகில் இருந்தவர்கள் பாலத்தின் மீது காப்பாற்ற வந்தனர். அப்போது காரில் உள்ளே இருந்த ஒருவர் காரின் கதவை திறந்து காருக்குள் இருந்த 5 மாத குழந்தையை மீட்டு பாலத்தின் மீது உள்ளவர்களிடம் வீசினார்.

அப்போது எதிர்பாராமல் குழந்தை பாலத்தின் மீது மோதி தண்ணீருக்குள் விழுந்தது. உடனே பாலத்தில் மேல் இருந்தவர்கள் ஆற்றுக்குள் குதித்து குழந்தையை உடனடியாக மீட்டனர். பின்னர் காரில் இருந்த மற்றவர்களையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தின் போது ஆட்டோவில் வந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். இந்தக் காட்சி அனைத்தும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories