இந்தியா

பா.ஜ.க-வுக்கு பரிவு காட்டும் தேர்தல் ஆணையம்... பா.ஜ.க தலைவருக்கு விதிக்கப்பட்ட தடையை குறைத்து உத்தரவு!

கர்நாடக பா.ஜ.க தலைவர் முனிராஜு கவுடாவிற்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் தடைக்காலத்தை தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.

பா.ஜ.க-வுக்கு பரிவு காட்டும் தேர்தல் ஆணையம்... பா.ஜ.க தலைவருக்கு விதிக்கப்பட்ட தடையை குறைத்து உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராத அரசு தன்னாட்சி அமைப்புகள் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசிற்கு சாதகமாக செயல்படுவதாக அன்மையில் அரசியல் கட்சியினர் பலர் குற்றம் சாட்டினார்கள். குறிப்பாக சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய அமைப்புகள் மோடி அரசுக்கு சாதமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவினரின் விதிமிறல்களை தேர்தல் ஆணையம் கண்டுக்கொள்ளாமல் செயல்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க தலைவர் முனிராஜு கவுடாவிற்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் தடைக்காலத்தை தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட முனிராஜு கவுடா தேர்தல் செலவுகள் பற்றிய கணக்கு விவரங்களை முறையற்ற வகையில் தாக்கல் செய்துள்ளார்.

இதனைக் கண்டறிந்த தேர்தல் ஆணையம் முறையற்ற வகையில் தாக்கல் செய்த குற்றத்திற்காக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முனிராஜு கவுடாவிற்கு 3 ஆண்டுகள் தடை விதித்தது. மேலும் இந்தத் தடை கடந்த ஜனவரி 9-ம் தேதி முதலில் தொடங்கியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முனிராஜு கவுடா
முனிராஜு கவுடா

அதில், “முனிராஜு கவுடா மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 11 படி முறையீடு செய்துள்ளார். அந்த முறையீட்டில் தேர்தல் ஆணையம் தனது தடைக்காலத்தைக் குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அக்டோபர் 9ம் தேதி அதற்காக நேரில் ஆஜராகி வாதிட்டார்” எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், முனிராஜு கவுடா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தடைக் காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 9 மாதங்கள் 9 நாட்கள் எனக் குறைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங்கிற்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 6 ஆண்டுகால தடையை 13 மாதங்களாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தேர்தல் ஆணையம் தனது நடுநிலைத் தன்மையை இழப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories