இந்தியா

விரைவில் வருகிறது சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடு - பயனாளர்களைக் கண்காணிக்க முடிவு ?

ஜனவரி 15ம் தேதி முதல் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விரைவில் வருகிறது சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடு - பயனாளர்களைக் கண்காணிக்க முடிவு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஃபேஸ்புக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தீபக் குப்தா அமர்வில் விசாரணக்கு வந்தது. அப்போது, சமூக வலைதளங்களுக்கான கட்டுப்பாடு நெறிமுறைகளை வகுக்க மத்திய அரச மேலும் மூன்று மாதகால அவகாசம் கோரி மனுதாக்கல் செய்தது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இணையதள சட்டபிரிவு 69ன் படி கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசுக்கு உரிமை இருப்பதாகத் தெரிவித்தார்.

அதனடிப்படையில் நெறிமுறைகளை வகுக்க பல்வேறு துறைகளுடன் மத்திய அரசு ஆலோசனைகளை நடத்தி வருவதாகக் கூறினார். ஜனவரி 15ம் தேதி அந்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனை, எற்ற நீதிபதிகள் அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், வழக்கை ஜனவரி இறுதி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

banner

Related Stories

Related Stories