இந்தியா

“பா.ஜ.கவின் நேர்மையான எம்.எல்.ஏ. இவர்தான்” - பக்‌ஷீஷ் சிங்கை ராகுல் காந்தி பாராட்டியது ஏன்?

ஹரியானா, மகாராஷ்டிராவில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் வாக்குப்பதிவு குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

“பா.ஜ.கவின் நேர்மையான எம்.எல்.ஏ. இவர்தான்” - பக்‌ஷீஷ் சிங்கை ராகுல் காந்தி பாராட்டியது ஏன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹரியானா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த இரு மாநிலங்களிலும் பா.ஜ.க, காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டி வலுவாக உள்ளது.

இதற்கிடையில், தேர்தல் பிரசாரத்தின் போது ஹரியானாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ. பக்‌ஷீஷ் சிங் என்பவர் மக்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு குறித்து சர்ச்சையை கருத்தை முன்வைத்துள்ளார். அதுதொடர்பாக காணொளியும் சமூகவலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

“பா.ஜ.கவின் நேர்மையான எம்.எல்.ஏ. இவர்தான்” - பக்‌ஷீஷ் சிங்கை ராகுல் காந்தி பாராட்டியது ஏன்?

அதில், “யாருக்கு நீங்கள் (மக்கள்) வாக்களித்தாலும் அவை தாமரை சின்னத்துக்கே பதிவாகும். யாருக்கு வாக்களித்தாலும் அதனை நாங்கள் கண்டறிந்துவிடுவோம். ஏனெனில் பிரதமர் மோடி மிகவும் அறிவாளி, அது போல ஹரியானா முதலமைச்சராக உள்ள மனோகர்லால் கட்டாரும் அறிவாளி” எனப் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பாஜகவின் மிகவும் நேர்மையானவர்” என பக்‌ஷீஷ் சிங்கை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, வாக்குச்சாவடிகளை கைப்பற்றி பா.ஜ.கவினர் மோசடி செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏவே இவ்வாறு பேசியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பக்‌ஷீஷ் சிங்கிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மோடி அரசின் நேரடி பாதுகாவலனாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதால் இந்த விளக்கம் கேட்பும் கண் துடைப்பாகவே இருக்கும் எனவும் எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories