இந்தியா

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரிப்பு - டிராய்!

செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரிப்பு - டிராய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்த காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்கள் தங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள செல்போனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரிப்பு - டிராய்!

நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த செல்லிடப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளா்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.

கணக்கீட்டு காலத்தில், ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 84.45 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துக் கொண்டுள்ளது. அதேசமயம், வோடஃபோன் ஐடியாவிலிருந்து 49.56 லட்சம் வாடிக்கையாளா்களும், பாா்தி ஏா்டெல் நிறுவனத்திலிருந்து 5.61 லட்சம் பேரும், பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 2.36 லட்சம் வாடிக்கையாளா்களும் வெளியேறியுள்ளனா்.

பிராட்பேண்ட் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 1.87 சதவீதம் அதிகரித்து 61.55 கோடியாக இருந்தது. இதில், ஜியோ இன்ஃபோகாம் 34.82 கோடி வாடிக்கையாளா்களை தக்க வைத்துக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. பாா்தி ஏா்டெல் (12.67 கோடி), வோடஃபோன் ஐடியா (11.11 கோடி), பிஎஸ்என்எல் (2.15 கோடி) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என டிராய் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories