இந்தியா

மாறும் காலநிலை... அதிகரிக்கும் மாசு.. சிக்கலில் இந்தியத் தலைநகர் டெல்லி - என்ன செய்யப்போகிறது அரசு ?

நடப்பு ஆண்டுக்கான குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் வாகனங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது.

மாறும் காலநிலை... அதிகரிக்கும் மாசு.. சிக்கலில் இந்தியத் தலைநகர் டெல்லி - என்ன செய்யப்போகிறது அரசு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் தலைநகரான டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டி வருகிறது. 215ஆக காற்று மாசின் அளவு பதிவாகியுள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசநோய் தொடர்பான உபாதை அதிகரித்து வருகிறது.

வழக்கமாக குளிர்காலத்தில்தான் இதுபோன்று காற்று மாசுபாடு பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பே காற்று மாசுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

மாறும் காலநிலை... அதிகரிக்கும் மாசு.. சிக்கலில் இந்தியத் தலைநகர் டெல்லி - என்ன செய்யப்போகிறது அரசு ?

இதையடுத்து, காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக வாகனங்களின் இயக்கத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது டெல்லி மாநில அரசு.

அதன்படி, கடந்த ஆண்டு பின்பற்றதை போன்று ஒற்றை இலக்க எண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும், இரட்டை இலக்க எண்கள் கொண்ட வாகனங்கள் ஒரு நாளும் என ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை நவம்பர் 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும், விதி மீறினால் 4,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories