இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல் : வாக்குறுதிகளைத் தெறிக்கவிடும் கட்சிகள்... மக்களின் ஆதரவைப் பெறப்போவது யார்?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கட்சிகளின் வியூகங்கள் என்ன? ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார்?

மகாராஷ்டிரா தேர்தல் : வாக்குறுதிகளைத் தெறிக்கவிடும் கட்சிகள்... மக்களின் ஆதரவைப் பெறப்போவது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டிலேயே மூன்றாவது பெரிய மாநிலமான மகாராஷ்ட்ராவின் சட்டமன்றத் தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேசிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

288 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்ட்ரா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறவிருக்கிறது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க, சிவசேனாவுடன் இணைத்து போட்டியிடுகிறது.

2014 சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளாக நீடித்த பா.ஜ.க-சிவசேனா கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்தித்தது. இந்த முறை பாஜக 152 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் கூட்டணியிட்டு போட்டியிடுகிறார்கள்.

மகாராஷ்டிரா தேர்தல் : வாக்குறுதிகளைத் தெறிக்கவிடும் கட்சிகள்... மக்களின் ஆதரவைப் பெறப்போவது யார்?

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 147 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 121 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 20 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் களம் காணுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த மராட்டிய மண்ணில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு விவகாரத்திற்குப் பின்னர் பா.ஜ.கவும், சிவசேனாவும் மிக வேகமாக வளரத்தொடங்கின. 1995ம் ஆண்டில் இந்தக் கூட்டணி முதன்முதலாக ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் நடந்த மூன்று சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் ,தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மராட்டிய மண்ணை தங்கள் வசம் வைத்துக்கொண்டது.

ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது உருவாக்கப்பட்ட மோடி அலையால் அந்த நிலை மாறி, பா.ஜ.கவும்,சிவ சேனாவும் மராட்டிய மண்ணில் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கின. அது 2014 சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்தது.

மகாராஷ்டிரா தேர்தல் : வாக்குறுதிகளைத் தெறிக்கவிடும் கட்சிகள்... மக்களின் ஆதரவைப் பெறப்போவது யார்?

1985ம் ஆண்டு 161 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 2014 சட்டமன்றத் தேர்தலில் 42 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 1985ல் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க 2014 சட்டமன்றத் தேர்தலில் 122 தொகுதிகளைப் பிடித்தது.

தாக்கரே குடும்பத்திலிருந்து முதன்முறையாக இந்தத் தேர்தலில் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். சிவசேனா கட்சி சார்பாக, உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே சிவசேனாவின் கோட்டையாகக் கருதப்படும் வொர்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

மகாராஷ்டிரா தேர்தல் : வாக்குறுதிகளைத் தெறிக்கவிடும் கட்சிகள்... மக்களின் ஆதரவைப் பெறப்போவது யார்?

நடைபெறவிருக்கும் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. சிவசேனா 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் உணவகங்கள், பள்ளிகளுக்குச் செல்ல கிராமப்புற மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து சேவை, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 10,000 ரூபாய், விவசாய கடன் தள்ளுபடி,1 ரூபாய் கிளினிக் ஆகிய திட்டங்களை அறிவித்துள்ளது.

காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி விவசாயக் கடன் தள்ளுபடி, மூத்த குடிமக்களுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித் தொகை, மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80% இட ஒதுக்கீடு, மோட்டார் வாகன சட்டத்தில் விதிக்கப்பட்ட அபராதம் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

பா.ஜ.க தனது வாக்குறுதியில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு சூரிய ஆற்றல் மூலம் தடையற்ற மின்சாரம், அடுத்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உறுதி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் : வாக்குறுதிகளைத் தெறிக்கவிடும் கட்சிகள்... மக்களின் ஆதரவைப் பெறப்போவது யார்?

5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியின் மீது பெரும்பாலான மக்களுக்கு பலத்த வெறுப்பு நிலவுகிறது. மும்பையில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றது, கடந்த 5 ஆண்டுகளில் 17,000 விவசாயிகள் தற்கொலை, மராட்டியர்களின் இடஒதுக்கீடு விவகாரம் ஆகியவையும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளன.

இடதுசாரி, தலித் செயற்பட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கை தலித் மக்களை கோபமடைய வைத்திருக்கிறது. ஒரு பக்கம் கடும் வறட்சி, இன்னொரு பக்கம் மழை வெள்ளத்தால் பொருளாதார தலைநகரம் தண்ணீரில் மிதப்பதும் பா.ஜ.க-வுக்கு எதிராகச் செயலாற்றக் கூடும்.

இது மட்டுமின்றி பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், பா.ஜ.க மீண்டும் அம்மாநிலத்தைக் கைப்பற்றுமா அல்லது காங்கிரஸ் கூட்டணியின் கை ஓங்குமா என்பது வரும் 24ம் தேதி தெரிந்துவிடும்.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories