இந்தியா

மகாராஷ்டிரா தேர்தல் : இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசும் பா.ஜ.க - தற்போதைய உண்மை நிலை என்ன?

மகாராஷ்டிரா தேர்தலையொட்டி, மக்களை ஏமாற்றும் விதத்தில் வாக்குறுதிகளை வாரியிறைத்திருக்கிறது பா.ஜ.க.

மகாராஷ்டிரா தேர்தல் : இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசும் பா.ஜ.க - தற்போதைய உண்மை நிலை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் 21ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா மும்பையில் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கின்றனர். பா.ஜ.க ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என கூசாமல் புளுகியிருக்கிறார்கள்.

பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், “5 ஆண்டுகளில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மாநில பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்தப்படும். 2022க்குள் அனைவருக்கும் வீடு கட்டிக் கொடுக்கப்படும்.” உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

மகாராஷ்டிரா தேர்தல் : இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசும் பா.ஜ.க - தற்போதைய உண்மை நிலை என்ன?

பா.ஜ.க இப்படி தேர்தலுக்காக வாக்குறுதிகளை வீசும் நிலையில், யதார்த்த நிலை என்னவோ அந்தோ பரிதாபம் தான்.

இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2017-2018 ஆண்டில் வேலையின்மை சதவீதம் அதிகரித்திருப்பதாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2011-2012ல் 2.2% ஆக இருந்த வேலையின்மையின் விகிதம் 2017-2018 ஆண்டில் 6.1% ஆக அதிகரித்திருக்கிறது. 1972-1973 ஆண்டுக்குப் பிறகு வேலையின்மை மிக மோசமாக அதிகரித்த காலமாக இது கணக்கிடப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரா தேர்தல் : இஷ்டத்துக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசும் பா.ஜ.க - தற்போதைய உண்மை நிலை என்ன?

நாட்டில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி காணப்படும் நிலையில், வேலையின்மை குறித்த அறிக்கை ஒன்றை சமீபத்தில் சி.எம்.ஐ.இ வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவில் அதிகளவில் வேலையின்மை காணப்படும் முதல் 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் பா.ஜ.க-வால் ஆளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மிக அதிக வேலையின்மை அதிகம் உள்ள மாநிலமாக 31.2 சதவீதத்துடன் பா.ஜ.க ஆளும் திரிபுரா முதலிடத்தில் உள்ளது. நிலைமை இப்படியிருக்க, மக்களை ஏமாற்றுவதற்காக, விருப்பம்போல் வாக்குறுதிகளை வழங்குவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories