இந்தியா

போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை கொஞ்சம் நிறுத்துங்கள் : மோடிக்கு கபில் சிபல் அட்வைஸ்!

போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்துங்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் மோடியை சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை கொஞ்சம் நிறுத்துங்கள் : மோடிக்கு கபில் சிபல் அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் பொருளாதார தடுமாற்றத்தில் உள்ளது என நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி கபில் சிபல் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில், தடுமாற்றத்தில் பொருளாதாரம், புள்ளியல் தரவுகளில் அரசியல் குறுக்கீடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற நுகர்வு வீழ்ச்சி போன்றவை குறித்து அபிஜித் பானர்ஜி கூறியிருப்பது உங்களுக்கு தெரியுமா என மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 70 ஆண்டுகளில் இதுவரை இந்த நிலை ஏற்பட்டதில்லை என குறிப்பிட்ட அவர், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை நிறுத்திவிட்டு இனியாவது மக்கள் நலன் குறித்த பணிகளை மோடி கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories