இந்தியா

“இந்தியா அழிவதை அனுமதிக்க முடியாது” : மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட யெச்சூரி வலியுறுத்தல்!

இந்தியாவின் எதிர்காலம் பொருளாதார மந்தநிலையால் அழிவதை அனுமதிக்க முடியாது. எனவே மோடி அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

சீத்தாராம் யெச்சூரி
சீத்தாராம் யெச்சூரி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி வசூல் முறையை அமல்படுத்தி அவர்களை கடும் நெருக்கடியில் சிக்க வைத்தது. அதனால், ஜி.எஸ்.டி வரி வருவாய் கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு, செப்டம்பரில் ரூ. 91 ஆயிரத்து 916 கோடியாகக் குறைந்துள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார மந்த நிலை தற்போது கடும் வீழ்ச்சியாக மாறியுள்ளது. குறிப்பாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, வங்கிகளில் வசூலாகத வரக்கடன். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பல்வேறு காரணங்களினால் பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழ்ந்துக்கிடக்கின்றது.

இந்த பொருளாதார மந்தநிலை நீடித்து வரும் நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை 6.9 சதவீதத்தை விட குறைவாக உள்ளது. அதாவது 6.9 சதவிகிதத்தில் இருந்து 6.1 சதவீதமாகவே இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து பொருளாதாரம் கடும் இன்னல்களைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக மத்திய பா.ஜ.க அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தற்போது உள்நாட்டு உற்பத்தி விகித மதிப்பீட்டை, ரிசர்வ் வங்கி கணிசமாக குறைத்து உள்ளது.

ஆனால், மத்திய அரசு இந்த யதார்த்தத்தை மறைக்க நீண்டகாலமாக முயற்சித்து வருகிறது. அதனை இனியும் மறைப்பது என்பது சாத்தியமில்லை. நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியாவின் எதிர்காலம் அழிவதை அனுமதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories