இந்தியா

“திணறிவரும் இந்திய பொருளாதாரம்” : 5-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி!

இந்தியாவின் பொருளாதா வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதால்தான் ரெப்போ ரேட் வட்டியை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

“திணறிவரும் இந்திய பொருளாதாரம்” : 5-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கை கூட்டத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தும். அந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை குறித்த முடிவுகளை வெளியிடப்படும்.

மேலும் அந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால குறைந்தபட்ச வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) போன்றவற்றில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்து முடிவும் எடுக்கப்படும். அதன் படி அந்த கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

சர்வதேச பொருளாதார நிலைமை, வட்டி விகிதங்கள், பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவின் தாக்கம் போன்றவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் முடிந்து நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டள்ளது.

அதில், வங்கிகளுக்கான குறைந்தபட்ச வட்டி (ரெப்போ ரேட்) 25 புள்ளிகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து 5-வது முறை ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த 5 முறையும் சேர்த்து மொத்தமாக ரெப்போ வட்டி 1.35 சதவீதம் குறைத்துள்ளது.

“திணறிவரும் இந்திய பொருளாதாரம்” : 5-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி!

மேலும், ரிசர்வ் வங்கி கூட்டத்தில், 2019 - 20ம் ஆண்டிற்கான ஜிடிபி 6.9 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததை, 6.1 சதவீதமாக குறைப்பது எனவும், 2020 - 21ம் ஆண்டிற்கான ஜி.டி.பி 7.2 சதவீதம் ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகளுக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வாடிக்கையாளர்களின் மீதான கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பை அடுத்து, வங்கிகள் விரைவில் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வீடு, வாகனம், விவசாயம் உள்ளிட்ட கடன்களின் வட்டி குறையும்.

இந்தியாவின் பொருளாதா வளர்ச்சி மந்த நிலையில் தவிப்பதனால் தான், ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ ரேட் வட்டியைக் குறைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

banner

Related Stories

Related Stories