இந்தியா

“காஷ்மீரில் 144 சிறுவர்களை கைது செய்தது உண்மை” : உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை தாக்கல்!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு உரிமைகளைப் பறித்ததற்குப் பின் இதுவரை 144 சிறுவர்களை, காஷ்மீர் காவல்துறை கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.

“காஷ்மீரில் 144 சிறுவர்களை கைது செய்தது உண்மை” : உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜம்மு காஷ்மீர் சிறுவர்கள் பாதுகாப்புப் படையினரால் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல ஆர்வலர் எனாக்‌ஷி கங்குலி மற்றும் சாந்தா சின்ஹா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்கு 4 பேர் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைந்திருந்தது.

அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதி அலி மொஹமது மக்ரே தலைமையிலான நால்வர் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, உச்சநீதிமன்றத்தின் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், சிறுவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் மாநில காவல்துறையினர் அளித்த அறிக்கையையே, தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில்தான், “கல் எறிந்ததாகவும், வன்முறை நடத்தி தனியார் மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் காஷ்மீரில், இதுவரை 144 சிறுவர்கள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 மற்றும் 11 வயது சிறுவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“காஷ்மீரில் 144 சிறுவர்களை கைது செய்தது உண்மை” : உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை தாக்கல்!

மேலும், இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக கைது செய்யப்படவில்லை; அவர்களுக்கென உருவாக்கப்பட்ட சட்டத்தின் படியே கைது செய்யப்பட்டு, குழந்தைகள் நல காப்பகத்தில் வைக்கப்பட்டதாகவும், 144 சிறுவர்களில் தற்போது 142 பேரை விடுதலை செய்துள்ளதாகவும், மீதமுள்ள 2 பேர் மட்டும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அதில், சிறுவர்கள் கல்லெறியும் வேலைகளில் ஈடுபடும்போது உடனடியாக அவர்கள் அதே இடத்தில் கைது செய்யப்பட்டு சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பப்படுவதாகவும், இவற்றில் சில சம்பவங்கள் மிகைப்படுத்தப்படுவதாகவும் காவல்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி சிறுவர்களுக்கான நீதிக்குழு தாக்கல் செய்த அறிக்கை கூறுகிறது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஜம்மு காஷ்மீர் சிறுவர்களுக்கான நீதிக் குழுவை முழுவதும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories