இந்தியா

வெள்ளத்தில் மிதக்கும் உத்தரப் பிரதேசம் : கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்வு!

உத்தரப்பிரதேசத்தில் கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் உத்தரப் பிரதேசம் : கனமழையால் பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தரப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் மாநிலத்தின் முக்கிய பகுதியான பிரயாக் ராஜின் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. லக்னோ, வாரணாசி சித்தார்த் நகர், அயோத்தி, கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக பெய்த கன மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 5 பேரை காணவில்லை. மேலும் பலியானவர்கள் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த 300 பேரை ராணுவத்தினரும் தேசியப் பேரிடர் படையினரும் மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே ஹைதராபாதில் பெய்துள்ள கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. மக்கள் நடக்க முடியாமலும் வாகனங்கள் செல்ல முடியாமலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மாநிலமே வெள்ளத்தால் சூழ்ந்திருக்கும் நிலையில் பா.ஜ.க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் விரைவாக எடுக்கவில்லை என வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories