இந்தியா

CHANDRAYAAN 2 : விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்

விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

CHANDRAYAAN 2 : விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. பல்வேறு வட்டப்பாதை நிலைகள் மாற்றப்பட்டு, ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றபோது, விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர், ஆர்பிட்டர் மூலமாக லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டது. இருப்பினும் லேண்டருடன் தொடர்புகொள்ள முடியவில்லை. இருப்பினும், விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பைப் பெறும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

CHANDRAYAAN 2 : விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்

இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றினர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்குத் துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியது. நாசாவின் செயற்கைக்கோள் லேண்டர் விழுந்த பகுதியை கடந்து சென்றது.

அதன் மூலம் தகவல் தொடர்பை மீட்டெடுக்கவும், லேண்டரின் நிலையை கண்டறியவும் நாசா விஞ்ஞானிகள் முயற்சித்தனர். ஆனால் அந்த செயற்கைக்கோளால் லேண்டரை படம்பிடிக்க முடியவில்லை என நாசா கைவிரித்துள்ளது.விக்ரம் லேண்டரின் ஆய்வு காலமான 14 நாட்கள் நேற்றுடன் முடிந்து விட்டது. விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதன் காரணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் அளித்துள்ள பேட்டியில், "விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இருப்பினும், சந்திரயான்-2 ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.

ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளன, எட்டு கருவிகளும் மிகச்சிறப்பாக செயல்படுகின்றன. ஆகவே சந்திரயான்-2 ஆர்பிட்டர் திட்டமிட்டபடி அதன் ஆய்வுகளை மேற்கொள்ளும்.மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்" என அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories