இந்தியா

“டி.வி, செல்போன் போன்று EVM மெஷினிலும் கோளாறு ஏற்படத்தான் செய்யும்” - சுனில் அரோரா பேட்டி!

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கருத்து தெரிவித்துள்ளார்.

“டி.வி, செல்போன் போன்று EVM மெஷினிலும் கோளாறு ஏற்படத்தான் செய்யும்” - சுனில் அரோரா பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக அந்தந்த மாநில தேர்தல், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, முதற்கட்டமாக மகாராஷ்டிர மாநில தேர்தல் அதிகாரி, போலிஸ் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினரிடம் இன்று சுனில் அரோரா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சுனில் அரோரா, “தீபாவளிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் தேர்தல் நடத்தவேண்டும் என்றும், வாக்குப்பதிவுகளை வாக்குச்சீட்டு முறையில் நடத்தவேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், வாக்குச்சீட்டு முறை தற்போது பழைய வரலாறாகவே பார்க்கப்படுகிறது.

ஆகையால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுவது என்பது சாத்தியமில்லாதது. மேலும், டிவி, தொலைபேசி உள்ளிட்டவற்றை போன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் கோளாறுகள் ஏற்படவே செய்யும். ஆனால் அவற்றை ஹேக் செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories