இந்தியா

“அநீதிக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு பெரியாரே உந்து சக்தி” : பினராயி விஜயன் ட்வீட்!

அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன்
முதல்வர் பினராயி விஜயன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் பெரியார் ஆதரவாளர்கள் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினரும் பெரியார் பிறந்தநாளை விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பெரியாரின் பிறந்தநாள் குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்! பெரியார் புகழ் ஓங்குக!” எனக் குறிப்பிட்டுள்ளார். பினராயி விஜயனின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories