இந்தியா

“எங்களுக்கு கன்னட மொழிதான் முதன்மையானது” - இந்தி குறித்த அமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா பதிலடி!

அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பதிலடி கொடுத்துள்ளார்.

“எங்களுக்கு கன்னட மொழிதான் முதன்மையானது” - இந்தி குறித்த அமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் அடையாளம் இந்திதான் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் இருந்தாலும், இந்திதான் நாட்டின் அடையாளமாக உள்ளது என உள்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான அமித்ஷா கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஒரு விவாதப் பொருளாகவே உருமாறியுள்ளது.

“எங்களுக்கு கன்னட மொழிதான் முதன்மையானது” - இந்தி குறித்த அமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா பதிலடி!

அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் சமயத்தில், கர்நாடக மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க முதலமைச்சரான எடியூரப்பாவும், அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள எடியூரப்பா, “நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும் சமமானவை. அதேபோல், கர்நாடகத்தை பொறுத்தவரை கன்னட மொழியே முதன்மையானது. கன்னட மொழியின் முக்கியத்துவத்திலும், கன்னட மக்களின் கலாசாரத்தை பாதுகாப்பதிலும் சமரசம் செய்துக்கொள்ள மாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், அமித்ஷாவின் கருத்து மேற்கு வங்க மாநில பா.ஜ.கவினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பா.ஜ.க-வின் இந்தி திணிப்பு திட்டம் சொந்த கட்சியினரையே முகம்சுளிக்க வைத்துள்ளது என எதிர்க்கட்சியினர் சாடியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories