இந்தியா

கோதாவரி ஆற்றில் கவிழ்ந்த சுற்றுலா படகு - 12 பேர் பலி : தொடரும் மீட்புப் பணி

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோதாவரி ஆற்றில் கவிழ்ந்த சுற்றுலா படகு - 12 பேர் பலி : தொடரும் மீட்புப் பணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய 61 பேரில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு ஒன்றில் 60 பேர் இன்று சுற்றுலா மேற்கொண்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகில் அளவுக்கு அதிகமாக நபர்கள் பணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் பாதுகாப்பு உடைகள் எதுவும் இல்லாத நிலையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றபோது ஆற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்திருக்கும் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. நீரில் மூழ்கிய 60 பேரில் இதுவரை 27 பேரை மீட்பு தேசிய பேரிட மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மீட்பு பணியில் 2 குழுக்கள் ஈடுபட்டுள்ளது. அவர்கள் மூலம் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களை தேடும் பணி மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கோதாவரி ஆற்றில் அனைத்து படகு சேவைகளையும் ரத்து செய்யபடும் என்றும் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories