இந்தியா

இதுவரை காணாத சரிவை சந்தித்த ஏற்றுமதி இறக்குமதி; கடும் வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தொழில்துறை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதுவரை காணாத சரிவை சந்தித்த  ஏற்றுமதி இறக்குமதி; கடும் வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் மோட்டார் வாகனத்துறை உள்ளிட்ட பல துறைகள் ஆட்டம் கண்டுள்ளன. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதுவரை காணாத சரிவை சந்தித்த  ஏற்றுமதி இறக்குமதி; கடும் வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

பெட்ரோலியம், பொறியியல், தோல், நவரத்தினங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஏற்றுமதி குறைந்துவிட்ட காரணத்தால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 6.5 சதவிகிதம் சரிந்து 1.86 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

இதேபோல, இறக்குமதியும் 13.45% அளவுக்கு சரிந்து, 2.81 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றுமதி, இறக்குமதி சரிவே குறைந்த அளவு என்றும் தெரியவந்துள்ளது.

இதுவரை காணாத சரிவை சந்தித்த  ஏற்றுமதி இறக்குமதி; கடும் வர்த்தக பற்றாக்குறையில் இந்தியா!

ஒட்டுமொத்தமாக, நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ஏற்றுமதி 1.53 சதவிகிதமும், இறக்குமதி 5.68 சதவிகிதமும் குறைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories