இந்தியா

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் : காணாமல் போன கல்லூரி மாணவி புகார்!

பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் என்று அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி பேட்டியளித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் : காணாமல் போன கல்லூரி மாணவி புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் பா.ஜ.க-வினரே அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய உத்திர பிரதேச உன்னாவோ பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்த். இவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இணை அமைச்சராக இருந்துள்ளார்.

இவரின் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் 23 வயது நிரம்பிய மாணவி ஒருவர், சின்மயானந்த் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி கடந்த மாதம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளிட்டார். இதனையடுத்து வீடியோ வெளியான அடுத்தநாளே மாணவி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் : காணாமல் போன கல்லூரி மாணவி புகார்!

இதனையடுத்து அந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு தொடர்பாக திறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டுவந்தது. இந்நிலையில், காணாமல்போன அந்த மாணவி 18 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அப்போது பாதிக்கப்பட்ட மாணவி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது, “சின்மயானந்த் என்னை பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார். அதன்பிறகும் கூட ஒருவருடமாக தொடர் பாலியல் தொல்லை கொடுத்துவந்தார்.

முன்னதாக இதுதொடர்பாக டெல்லி, லோதி சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் டெல்லி போலிஸார் என்னுடைய புகாரை ஷாஜகான்பூர் காவல்துறை விசாரிக்க அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் இன்னும் ஷாஜகான்பூர் போலிஸார் வழக்கு பதிவு செய்யவில்லை.

இதனிடையே நேற்றைய தினம் திறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரத்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்தேன். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் : காணாமல் போன கல்லூரி மாணவி புகார்!

என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அவரை அங்குள்ள போலிஸார் மிரட்டியுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் மிரட்டல் வந்துள்ளது.

நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என் அறையை ஊடகங்கள் முன்பு திறக்கவேண்டும். என்னிடம் உள்ள வீடியோ ஆதாரங்களை தேவைய நேரத்தில் வெளியிடுவேன்.

என்னைப் போலவே, பல பெண்களை, சின்மாயனந்த் சீரழித்துள்ளார். அவர்கள் எத்தனை பேர் என்பதும் எனக்கு தெரியும். பாதிக்கப்பட்டவர்களில், சின்மயானந்துக்கு எதிராக, துணிந்து போராட முன்வந்திருப்பது நான் மட்டுமே.” என அந்த மாணவி கூறினார்.

banner

Related Stories

Related Stories