இந்தியா

ஜி.எஸ்.டி-யால் முடங்கும் வைரத் தொழில்: மோடியின் சொந்த ஊரில் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை பறிப்பு!

மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் 60 ஆயிரம் ஊழியர்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர்.

ஜி.எஸ்.டி-யால் முடங்கும் வைரத் தொழில்: மோடியின் சொந்த ஊரில் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை பறிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடியின் தலைமையில் இரண்டாவது முறையாக மத்திய அரசில் பாஜக பொறுப்பேற்றதில் இருந்து நாடு முழுவதும் சிறுபான்மையினர் முதற்கொண்டு பலர் பல வகையில் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக பாஜக அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கைகளால் சிறு, குறு தொழில்கள் முழுவதும் முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதிலேயே திண்ணமாக உள்ளது.

ஜி.எஸ்.டி-யால் முடங்கும் வைரத் தொழில்: மோடியின் சொந்த ஊரில் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை பறிப்பு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதத்திற்கு கீழ் சரிந்துள்ளது. இதனால், ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் முதலீடு இல்லாததால் தனது ஊழியர்களை மாற்று வேலையை தேடச் சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர்.

அதற்கு உதாரணமாக உணவு உற்பத்தியில் பிரிட்டானியா, பார்லே போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளன. ஆட்டோ மொபைல் துறையில் டிவிஎஸ் மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் சம்பளத்துடன் கூடிய பணி நாளின் எண்ணிக்கையை குறைத்துள்ளன. ஆட்டோ மொபைல் துறையில் 3.5லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி-யால் முடங்கும் வைரத் தொழில்: மோடியின் சொந்த ஊரில் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை பறிப்பு!

இதுபோன்ற நடவடிக்கைகளால் நாட்டில் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால் மோடியின் அமைச்சரவை சகாக்களோ பொருளாதாரத்தில் எந்த நெருக்கடியும், சரிவும் ஏற்படவில்லை என பழைய பாட்டையே பாடி வருகின்றனர்.

இந்த நிலையில், வைரம் பட்டை தீட்டுவதற்கும், பாலிஷ் செய்வதற்கும் உலகளவில் பிரபலமான ஊர் குஜராத்தின் சூரத் நகர். இது பிரதமர் மோடியின் சொந்த ஊரும் கூட. பா.ஜ.க அரசின் நிர்வாக சீர்கேடு மோடியின் சொந்த ஊர் மக்களையும் விட்டுவைக்கவில்லை.

ஜி.எஸ்.டி-யால் முடங்கும் வைரத் தொழில்: மோடியின் சொந்த ஊரில் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை பறிப்பு!

பட்டைத்தீட்டப்பட்ட வைரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 7.5% ஆக உயர்த்தியதால் குஜராத்தில் வைரத் தொழில் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. பா.ஜ.க அரசின் கடுமையான வரிவிதிப்பால் 60,000 வைரத் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

குஜராத்தின் சூரத் உட்பட பல நகரங்களில் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 15 ஆயிரம் சிறு, குறு, பெரிய வைரத் தொழில்களை செய்து வருகின்றனர். வரிவிதிப்பால் தொழில் முடங்கியதால் இதுவரை 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக குஜராத் வைர தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி-யால் முடங்கும் வைரத் தொழில்: மோடியின் சொந்த ஊரில் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை பறிப்பு!

வைரத் தொழிலை மீட்டெடுக்க வங்கிகளில் கடன் வாங்க முயற்சி செய்தாலும் நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி போன்றவர்கள் மோசடி செய்ததால், கடன் கொடுக்கவும் வங்கிகள் மறுக்கின்றன. இதனால், சிறு, குறு தொழிலாளர்கள் பலர் நொந்து போயுள்ளனர் என தொழிலாளர் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

வைரம் பட்டைத் தீட்டுவதையே காலம் காலமாக செய்துவரும் தொழிலாளர்களால் மாற்று வேலைக்குக் கூட செல்ல முடியாமல், தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் நித்தமும் தவித்து வருகின்றனர். அதிலும் சிலர், வைரத் தொழிலில் முதலீடு செய்துவிட்டு முன்னேறவும் முடியாமல், தொழிலை கைவிடவும் முடியாமல் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories