இந்தியா

“ப.சிதம்பரத்தின் சொத்துகள் பற்றி உலாவும் செய்திகள் முற்றிலும் பொய்”: ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம்!

ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“ப.சிதம்பரத்தின் சொத்துகள் பற்றி உலாவும் செய்திகள் முற்றிலும் பொய்”: ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்தனர். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ப.சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பல நாடுகளிலும் சொத்துகள், வங்கிக் கணக்குகள் இருப்பதாக சில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

“ப.சிதம்பரத்தின் சொத்துகள் பற்றி உலாவும் செய்திகள் முற்றிலும் பொய்”: ப.சிதம்பரம் குடும்பத்தினர் விளக்கம்!

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ப.சிதம்பரம் மீது செய்தி நிறுவனங்களில் கடந்த சில நாட்களாக தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ப.சிதம்பரத்தின் 50 ஆண்டுகால பொதுவாழ்வில் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது. ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயன்றாலும் உண்மை ஒருநாள் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.

சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை. தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை. பல நாடுகளில் சொத்துகள்,வங்கிக் கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. உண்மை எது எனத் தெரியாதவரை ஊடகங்கள் பொய் பிரசாரத்தில் ஈடுபட வேண்டாம்.

பல நாடுகளில் சொத்துகள், வங்கிக் கணக்குகள் இருப்பதாக கூறுவது அனைத்தும் கற்பனைக் கதை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி தான். கணக்கில் காட்டப்படாத சொத்து, வங்கி கணக்குகள் இருப்பதை அரசு முடிந்தால் நிரூபித்து காட்டட்டும்'' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories