இந்தியா

ஆட்டோமொபைல் துறையை அடுத்து வீழ்ச்சியடையும் உள்ளாடை விற்பனை : தொடர் சிக்கலில் இந்தியப் பொருளாதாரம் ?

இந்தியாவில் இருக்கும் 4 முன்னணி உள்ளாடை நிறுவனங்கள் கடந்த 10 வருடங்களில் இல்லாத வகையில் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளன.

ஆட்டோமொபைல் துறையை அடுத்து வீழ்ச்சியடையும் உள்ளாடை விற்பனை : தொடர் சிக்கலில் இந்தியப் பொருளாதாரம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொருளாதார தேக்க நிலையால், நாட்டிலுள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம், ஊழியர்கள் பணி நீக்கம் ஆகிய மோசமான நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. செப்டம்பர் காலாண்டில் மட்டும் நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்க நேரிடம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை மட்டுமல்லாது பல்வேறு உற்பத்தித் துறைகளும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. வாகனங்கள் விலை அதிகம் என்பதால் உற்பத்தி தேக்கம் ஏற்பட்டுள்ளதையாவது எளிதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், விலை குறைவான உள்ளாடை விற்பனையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாடைகள் விற்பனை குறைந்துள்ளதாக பொருளாதார அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அதன் ஒருபகுதியாகத்தான் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான உள்ளாடைகளின் விற்பனையும் சரிந்துள்ளது.

இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில் ஜூன் காலாண்டில் உள்ளாடை விற்பனை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் 4 முன்னணி உள்ளாடை நிறுவனங்கள் கடந்த 10 வருடங்களில் இல்லாத வகையில் விற்பனை சரிவை சந்தித்துள்ளன.

1970ல் வெளியிடப்பட்ட Men's underwear index என்ற ஆய்வின் முடிவில், ஒரு நாட்டில் உள்ளாடை விற்பனை குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் ஏழ்மையான நிலையில் இருப்பதைக் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டது. இதனால்தான் இந்தியாவின் தற்போதைய நிலை, பொருளாதார அறிஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்துப் பேசியிருக்கும் காங்கிரஸை சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், “கடந்த ஆண்டில் உள்ளாடை வாங்கியவர்கள் 100 பேர் என்றால் இந்த ஆண்டு அது 75-ஆகக் குறைந்துள்ளது. இதனால், உள்ளாடை நிறுவன பங்குகளும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories