இந்தியா

51 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு... வெளிவரும் உண்மைகள்!

51 ஆண்டுகளுக்கு முன் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்களை இராணுவத்தின் தேடுதல் குழுவினர் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

51 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு... வெளிவரும் உண்மைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

51 ஆண்டுகளுக்கு முன் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் பாகங்களை இராணுவத்தின் தேடுதல் குழுவினர் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 1968ம் ஆண்டு பிப்ரவரி 7 அன்று பஞ்சாப்பின் சண்டிகர் நகரிலிருந்து ஜம்மு காஷ்மீரின் லே பகுதிக்கு 102 வீரர்களுடன் புறப்பட்டுச் சென்ற விமானம் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட விபத்தில் விழுந்து நொறுங்கியது. விழுந்த இடம் தொடர்பான துல்லியமான தகவல் தெரியாததால், இந்த விபத்து குறித்து பல்வேறு யூகங்கள் வலம்வந்தன.

மோசமான காலநிலையால் விமானம் திசைமாறிச் சென்று பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்துவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர் என்றும் பாகிஸ்தான் இராணுவம் இந்தத் தகவலை மறைக்கிறது எனவும் இராணுவ வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்நிலையில் தான், 'டோக்ரா ஸ்கவுட்' எனப்படும் டோக்ரா படைப்பிரிவின் இளம் வீரர்கள் குழு கடந்த மாதம் ஹிமாச்சல் பிரதேசத்தின் இமயமலை பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அதில் விமானத்தின் என்ஜின் உள்ளிட்ட பாகங்கள், உயிரிழந்த வீரர்களின் உடைகள், உடைமைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை டெல்லி இராணுவ தலைமையக கோப்புகளுடன் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்பட்டன.

இதுகுறித்து, பாதுகாப்பு பிரிவின் மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த ஆண்டு ஜூலை 26ம் தேதி டாக்கா பனிப்பாறைக்கு டோக்ரா சாரணர்களின் பயணம் தலைமையக வெஸ்டர்ன் கமாண்ட் ஆலோசனையுடன் தொடங்கியது.

51 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு... வெளிவரும் உண்மைகள்!

சுமார் 5,240 மீட்டர் உயரத்தில் டாக்கா பனிப்பாறையில் 13 நாட்கள் கடுமையான தேடல் பணிகளுக்குப் பிறகு, 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன ஏ.என் -12 பி.எல் -534 விமானத்தின் பல்வேறு பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடம் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் பலவிதமான யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் மற்றும் இறந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. தொடர்ந்து, இந்த விபத்து குறித்த உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories