இந்தியா

லஞ்சம் வாங்குவதில் போட்டி : அடிதடியில் ஈடுபட்ட உ.பி. போலிஸ் - வைரலாகும் வீடியோ!

உத்தர பிரதேசத்தில் போலிஸாரிடையே லஞ்சம் வாங்குவதில் ஏற்பட்ட போட்டி தகராறில் முடிந்துள்ளது.

லஞ்சம் வாங்குவதில் போட்டி : அடிதடியில் ஈடுபட்ட உ.பி. போலிஸ் - வைரலாகும் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் இரண்டு போலிஸாருக்கு இடையே லஞ்சம் வாங்குவதில் நிலவிய போட்டி தகராறில் முடிந்துள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

போலிஸ் ஜீப்பில் இருந்து இறங்கிய இரண்டு போலிஸாரில் ஒருவர் திடீரென மற்றொருவரை தாக்குகிறார். இதனால் ஆத்திரமடைந்தவர் ஜீப்பில் இருந்த தடியை எடுத்து சரமாரியாக அடிக்கிறார்.

உடன் இருந்தவர்கள் போலிஸாரின் அடிதடியைத் தடுத்து நிறுத்த முயற்சித்தும் பலனளிக்காததால் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் வாங்குவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய எஸ்.பி. அசுதோஷ் மிஸ்ரா கூறுகையில், நேற்று முன் தினம் இந்தச் சம்பவம் நடந்துள்ளது எனவும், மோதலில் ஈடுபட்ட இரண்டு போலிஸாரை சஸ்பெண்ட் செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்பே குற்றஞ்சாட்டி இருந்தன. தற்போது லஞ்சம் வாங்கும் விவகாரத்தில் காவல்துறையினரிடயே தகராறு ஏற்பட்டுள்ளது அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories