இந்தியா

இந்து பெண் உடலைச் சுமந்து சென்று அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் : வாரணாசியில் நெகிழ்ச்சி சம்பவம்!

வாரணாசியில் உடல் நலக்குறைவால் இறந்த ஏழை இந்துப் பெண்ணை இந்து முறைப்படி, இந்து கோஷங்களை உச்சரித்தபடியே எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளனர் இஸ்லாமிய இளைஞர்கள்.

இந்து பெண் உடலைச் சுமந்து சென்று அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் : வாரணாசியில் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாரணாசியை சேர்ந்த சோனி என்ற 19 வயது இந்துப் பெண் மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது தந்தை ஹேரிலால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது தாயும் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சோனியும், அவரது சகோதரருமே குடும்பத்தை கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சோனி திடீரென மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் சோனி குடும்பத்தினர் செய்வதறியாது அதிர்ச்சியுற்றனர். சோனியின் சகோதரரால் இறுதிச் சடங்கு செய்யமுடியாத கையறு நிலை. இந்நிலையில் அருகில் உள்ள இஸ்லாமிய குடும்பத்தினர் சோனி குடும்பத்தினரை தனது குடும்பமாக நினைத்து சோனியின் இறுதிச் சடங்குகள் செய்ய முன்வந்துள்ளனர்.

இதையடுத்து, சோனியின் உடலை இஸ்லாமிய இளைஞர்கள் இந்து முறைப்படி சடங்குகள் செய்து, தங்களது தோள்களில் சுமந்து, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்து பெண் உடலைச் சுமந்து சென்று அடக்கம் செய்த இஸ்லாமியர்கள் : வாரணாசியில் நெகிழ்ச்சி சம்பவம்!

அதிலும் உச்சபட்சமாக, இறுதி ஊர்வலத்தின்போது இந்து மரபுப்படி அங்கு வழக்கமாகச் சொல்லப்படும் `ராம் நாம் சத்யா ஹை' என்ற கோஷத்தையும் வழியெங்கும் உச்சரித்தே சென்றுள்ளனர் அந்த இஸ்லாமிய மக்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.

மதத்தின் பெயரால் நாடெங்கும் அச்சுறுத்தல்களும், வன்முறைகளும் மலிந்து வரும் வேளையில், இந்த உருக்கமான நிகழ்வு பலரையும் மனிதம் மீது நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories