இந்தியா

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீருக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவை நீக்கப்பட்டதாகவும் இந்த அறிவிப்பு இன்றைய நாள் முதலே அமலுக்கு வருகிறது எனவும் மத்திய பா.ஜ.க அரசு மாநிலங்களவையில் இன்று அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீருக்கான சட்டப்பிரிவை நீக்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் எதிர்க்கட்சிகளை மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடாமல் இருப்பதற்காக நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

144 தடை உத்தரவு நள்ளிரவு முதலே அமல்படுத்தப்பட்டதால் ஸ்ரீநகர் பகுதியில் சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவத்தினர்.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

ஸ்ரீநகர் சாலையில் சென்றுக்கொண்டிருக்கும் மக்களிடம் விசாரணையில் ஈடுபட்ட ராணுவத்தினர்.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியே வராததால் காஷ்மீரில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

பாதுகாப்பு படையினரின் வளையத்துக்குள் காஷ்மீரின் தோடா பகுதி.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

144 தடை காரணமாக கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் வீட்டிலேயே தஞ்சம்.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

தோடாவின் ஒவ்வொரு தெருக்களிலும் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

ஸ்ரீநகரின் சாலைகளில் வழி நெடுகிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் லே பகுதியில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அமைதியைத் தொலைத்த காஷ்மீர் மக்கள் : ராணுவ ஆக்கிரமிப்பில் ஜம்மு (album)

லடாக் பகுதியில் செயல்படும் பள்ளி

ஜம்மு பகுதி முழுவதும் ராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories