இந்தியா

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா?

23 லட்சத்தும் மேற்பட்டோர் எழுதிய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், வெறும் 3.5 லட்சம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய பள்ளிக்கல்வி வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வெழுதினர். இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் நேற்று தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா?

அதில், தேர்வெழுதிய 23 லட்சத்துக்கும் மேற்பட்டோரில் வெறும் 3 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வில் வெறும் 15 சதவிகிதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள http://cbseresults.nic.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல், டிஜிட்டல் லாக்கரில் அப்லோட் செய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

banner

Related Stories

Related Stories