இந்தியா

பா.ஜ.க. MLAவால் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் மீது ட்ரக் மோதல்.. திட்டமிட்ட விபத்தா என விசாரணை!

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் சென்ற கார் விபத்தில் சிக்கியது. திட்டமிட்டு நடத்தப்பட்டதா என விசாரணை.

பா.ஜ.க. MLAவால் பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் மீது ட்ரக் மோதல்.. திட்டமிட்ட விபத்தா என விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க எம்.எல்.ஏவால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் சென்ற கார் மீ ட்ரக் மோதி விபத்து ஏற்படுத்திய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் கடந்த ஆண்டு ஏப்.,13ம் தேதி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாலியல் கொடுமைக்கு ஆளான அந்த பெண் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் காரில் ரேபரேலி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அசுர வேகத்தில் வந்த ட்ரக் ஒன்று அவர்கள் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

அதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இருவரும் உயிரிழந்தனர். மேலும், அப்பெண்ணும், அவரின் வழக்கறிஞரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட நிலையில், ட்ரக்கை ஓட்டி வந்த ஓட்டுநரையும், உரிமையாளரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ட்ரக் லாரியின் எண் பலகை கருப்பு மையால் பூசி மறைக்கப்பட்டுள்ளதால் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories