இந்தியா

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி தாக்குதல்: இந்துத்வா கும்பலிடம் இளைஞரை காப்பாற்றிய இந்து தம்பதியர்!

மகாராஷ்டிராவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’  எனக் கோஷமிடுமாறு கூறி முஸ்லீம் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவா கும்பலிடமிருந்து, அவரை இந்து தம்பதியர் காப்பாற்றியுள்ளனர்.

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி தாக்குதல்: இந்துத்வா கும்பலிடம் இளைஞரை காப்பாற்றிய இந்து தம்பதியர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்வா கும்பல் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு ஊக்குவிக்கிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளும் எழுந்துவருகின்றன.

கடந்த மாதத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பைக் திருட வந்ததாகக் கூறி இஸ்லாமிய இளைஞர் ஒருவர் மீது மதவாதக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் 'ஜெய் ஸ்ரீ ராம்' என சொல்லச் சொல்லி, ஏழு மணிநேரம் கட்டி வைத்து அடித்ததில் மயக்கமடைந்து அவர் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல், மேற்கு வங்கத்தில் மதபோதகரை ரயிலில் இருந்து இந்துத்வா கும்பல் ஒன்று தள்ளிவிட்டது. அந்த சம்பவம் முடிந்த 2 நாட்களில் மும்பை தானா பகுதியில் திவா என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட்டால் விடுவிப்பதாகக் கூறி மிரட்டி அவரின் காரை சேதப்படுத்தி இந்துத்வா கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.

பின்னர் உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் முகமது தாஜுதீன் என்ற 16 வயது முஸ்லீம் சிறுவனையும், 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், குல்லா அணியக் கூடாது என்றும் மிரட்டியுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அசாம் மாநிலத்தில் ஃபக்ரூதின் அலி அகமது என்ற மருந்துக்கடை ஊழியரை பைக்கில் வந்த நான்கு இந்துத்வா கும்பல் அடித்து காயப்படுத்தியது.

இந்தத் தாக்குதல் நடைபெற்று ஒருவாரம் கூட ஆகாத நிலையில், அப்போது உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் செயல்பட்டு வரும் மதரஸா பள்ளியில் இஸ்லாமிய சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி தாக்குதல்: இந்துத்வா கும்பலிடம் இளைஞரை காப்பாற்றிய இந்து தம்பதியர்!

இந்நிலையில் மீண்டும், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் இம்ரான் இஸ்மாயில் படேல் என்பவர் இந்துத்வா கும்பலால் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இரவு அவரது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பத்துப் பேர் கொண்ட கும்பல் ஒன்று, பேகம்புரா பகுதியில் உள்ள ஹட்கோ கார்னர் அருகே இஸ்மாயிலை தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்தை நிறுத்திய இஸ்மாயிலை தாக்கி கீழே தள்ளி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மூன்று முறை கோஷமிடுமாறு வற்புறுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதலின் போது இஸ்மாயிலின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள இந்து குடும்பத்தினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த அந்த தம்பதிகள் இந்துத்வா கும்பலிடம் இருந்து இஸ்மாயிலை மீட்டுள்ளனர்.

மேலும், இந்துத்வா கும்பல் வந்த இருசக்கர வாகனத்தின் சாவியை பறித்துக்கொண்டு, இஸ்மாயில் பாதுகாப்பாக வீட்டிற்குச் செல்வதை இந்து தம்பதியர் உறுதி செய்துள்ளனர்.

‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லச் சொல்லி தாக்குதல்: இந்துத்வா கும்பலிடம் இளைஞரை காப்பாற்றிய இந்து தம்பதியர்!

அதன்பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு தங்கள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும், எனவே பாதுகாப்பு அளிக்கவேண்டும். இஸ்மாயிலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐபிசி பிரிவு 153-ஏ மற்றும் 144 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளத்தில் வெளிவந்ததையடுத்து அந்த தம்பதியரின் துணிச்சல் நடவடிக்கையை பலரும் பாராட்டியுள்ளனர். இதுபோல சிறுபான்மையின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories