இந்தியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

வட மாநிலங்களான அசாம், பீஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வட மாநிலங்களான அசாம், பீஹார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பீஹார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 14 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் சுமார் 52 லட்சம் பேர் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கியுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர் வீடு உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் மழைக்கு இதுவரை 20க்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

அசாமில் உள்ள புகழ்ப்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீத பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின. இதை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி இதுவரை 23 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து நிவாரணப் பணிக்கு அசாம் அரசுக்கு 251 கோடியே 55 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories