இந்தியா

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தண்ணீர் : வெள்ளக்காடான அசாமில் தத்தளிக்கும் மக்கள்!

பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால், அசாமில் 43 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர்.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தண்ணீர் : வெள்ளக்காடான அசாமில் தத்தளிக்கும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கு ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால், அசாமில் 43 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தால் அசாம் மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 ஆயிரம் பேர் 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை பெரிய பாத்திரங்களில் வைத்து வெள்ளத்திலிருந்து காப்பாற்றி கழுத்தளவு நீரில் மிதந்து வருகின்றனர் இளைஞர்கள். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் இருப்பிடம், உடைமைகள், உணவு என ஏதுமின்றித் தவித்து வருகின்றனர்.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தண்ணீர் : வெள்ளக்காடான அசாமில் தத்தளிக்கும் மக்கள்!

அசாம் மாநில வெள்ளப்பெருக்கால், காசிரங்கா தேசிய பூங்காவின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அங்கிருந்த பல வனவிலங்குகள் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டாலும், அரிய வகை விலங்குகள் பல உயிரிழந்துள்ளன.

அசாமில் ஆற்றுப் பகுதிகளில் உள்ள பல கிராமங்கள் முழுமையாக வெள்ளத்துக்கு இரையாகியுள்ளன. இன்னும் பல லட்சம் பேரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் எடுத்து வருகின்றனர்.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தண்ணீர் : வெள்ளக்காடான அசாமில் தத்தளிக்கும் மக்கள்!

மக்கள் வீடுகளை இழந்து, பசி, பட்டினியுடன் தவிக்கின்றனர். நிவாரணப் பணிகளைச் செய்ய அதிகாரிகள் யாரும் கடந்த 2 நாட்களாக வரவில்லை எனவும் அசாம் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அசாமில் ஆளும் பா.ஜ.க அரசு நிவாரணப் பணிகளில் துரிதகதியில் செயல்பட்டு மக்களைக் காப்பாற்றவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையும்.

banner

Related Stories

Related Stories