இந்தியா

இனி ‘நீட்’ கிடையாது, புதிதாக வருகிறது ‘நெக்ஸ்ட்’ தேர்வு : பா.ஜ.க-வின் அடுத்த சதி!

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இனி ‘நீட்’ கிடையாது, புதிதாக வருகிறது ‘நெக்ஸ்ட்’ தேர்வு : பா.ஜ.க-வின் அடுத்த சதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு எழுதுவதை மத்திய பா.ஜ.க. அரசு கட்டாயமாக்கியது. இதனால் நாடு முழுவதும் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. தற்போது முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை தாக்கல் செய்தது.

அந்த வரைவு மசோதவின் மூலம் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. பின்னர் அது நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, “புதிய திருத்தத்தின்படி, எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு நாடு முழுவதும் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்’ (நெக்ஸ்ட்) என்ற பொது தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வின் மதிப்பெண்கள் அடைப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

இனி ‘நீட்’ கிடையாது, புதிதாக வருகிறது ‘நெக்ஸ்ட்’ தேர்வு : பா.ஜ.க-வின் அடுத்த சதி!

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை முடித்த பிறகு, முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக அவர்கள் நீட் போன்ற எந்த நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியது இல்லை. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்வு மேலும் மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கும். மாணவர்களுக்கு தொடர்ச்சியான தேர்வு அவர்களை வடிகட்டுவதற்கான ஏற்பாடு, இந்த தேர்வில் ஏழை மாணவர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories