இந்தியா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3,800 கோடி மோசடி செய்த பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம்!

பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் (பி.பி.எஸ்.எல்) ரூ .3,800 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதை நேற்று கண்டறிந்து அதை ரிசர்வ் வங்கிக்கு அளித்த புகாரில் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ரூ 3 ஆயிரத்து 800 கோடி கடன் திருப்பி செலுத்தப்படவில்லை என்று பஞ்சாப் நேஷனல் வங்கி ரிசர்வ் வங்கிக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளது.

பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் வங்கி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், கூட்டமைப்பு வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்காக அதன் கணக்கு புத்தகங்களில் மோசடியை கையாண்டதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக முதல் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணை தொடங்கியுள்ளது.

ஏற்கனவே வைர வியாபாரிகள் நீரவ் மோடிக்கும் மெஹூல் சோக்சிக்கும் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்து மோசடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது இரண்டாவது பலத்த அடியாக கருதப்படுகிறது.

banner

Related Stories

Related Stories