இந்தியா

அரசு அதிகாரிகளுக்கு இனிமேல் பாதம்,பிஸ்தா தான் கொடுக்கணுமாம் : சுகாதாரத்துறை உத்தரவு !

அரசு அதிகாரிகள் பங்குபெறும் கூட்டங்களில், பிஸ்கட்களுக்கு பதிலாக உலர் பழங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளுக்கு இனிமேல் பாதம்,பிஸ்தா தான் கொடுக்கணுமாம் : சுகாதாரத்துறை உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அரசு அதிகாரிகள் பங்குபெறும் கூட்டங்களில், பிஸ்கட்களுக்கு பதிலாக உலர் பழங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “இனி மத்திய அரசு அதிகாரிகள் கூட்டங்களின் போது உடலுக்கு ஆரோக்கியமான உலர் பழங்கள், கடலை, பாதம், பேரீச்சம் பழம் போன்றவற்றை வழங்கலாம் என்றும் பிஸ்கட் வழங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாதாம், உலர்பழங்கள், பயிறுவகைகள் வழங்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories