இந்தியா

ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சித்த ராப் பாடகி மீது தேசத்துரோக வழக்கு!

ராப் பாடகி ஹர்ட் கவுர் மீது ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக பதிவுகளைப் பதிவிட்டதற்காக தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சித்த ராப் பாடகி மீது தேசத்துரோக வழக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராப் பாடகி ஹர்ட் கவுர் மீது ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக பதிவுகளைப் பதிவிட்டதற்காக தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்து பின் இங்கிலாந்து சென்று ராப் பாடகிய்யாகப் புகழ்பெற்ற ஹர்ட் கவுர் (தரண் கவுர் தில்லியன்) மீது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் இணைந்து இந்த தேசத்துரோக வழக்கினை பதிவுசெய்துள்ளது.

39 வயதான ராப் பாடகி ஹர்ட் கவுர் கடந்த திங்கட்கிழமை இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவுகளுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கறிஞரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சஷாங்க் சேகர் ஹர்ட் கவுருக்கு எதிரான புகாரை தாக்கல் செய்தார்.

ஹர்ட் கவுர், குஜராத் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குற்றவாளி எனவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வன்முறையைத் தூண்டும் தீவிரவாத அமைப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை புல்வாமா உள்ளிட்ட தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேச துரோகத்தை உள்ளடக்கிய இந்திய தண்டனைச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாரணாசியில் ஹர்ட் கவுருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்கு சைபர் குற்ற விசாரணை பிரிவுக்கு அனுப்பப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories