இந்தியா

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!

2019-ம் ஆண்டுக்கான ‘யுவ புரஸ்கார் விருது’ கவிஞர் சபரிநாதனுக்கும், சிறார் இலக்கியப் படைப்பாளிக்கான  ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது தேவி நாச்சியப்பனுக்கு (தெய்வானை) அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் சாஹித்ய அகாடமியின் யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் விருதுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.

23 இந்திய மொழிகளைச் சேர்ந்த இளம் (35 வயதிற்குற்பட்ட) இலக்கியப் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. சிறார் இலக்கியப் படைப்பாளிகளுக்கு பால சாகித்ய புரஸ்கார் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மொழிக்கும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். விருது பெறுவோர்க்கு செப்புப் பட்டயமும் ரூ. 50,000 பணமுடிப்பும் அதற்குரிய விழாவில் வழங்கப்படும்.

Press Release: Announcement of Sahitya Akademi Yuva Puraskar-2019. Ministry of Culture, Government of India, Sreenivasarao Kruthiventi

Posted by Sahitya Akademi on Friday, June 14, 2019

தமிழ் மொழிப் படைப்புகளுக்கான 2019-ம் ஆண்டுக்கான ‘யுவ புரஸ்கார் விருது’ 'வால்' கவிதைத் தொகுப்பாக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிறார் இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது தேவி நாச்சியப்பனுக்கு (தெய்வானை) அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Press Release: Announcement of Sahitya Akademi Bal Sahitya Puraskar-2019. Ministry of Culture, Government of India, Sreenivasarao Kruthiventi

Posted by Sahitya Akademi on Friday, June 14, 2019

இந்த ஆண்டு இந்திய அளவில் யுவ புரஸ்கார் விருதுகளை கவிஞர்களே அதிகளவில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories