இந்தியா

கடும் வெப்பத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

உத்தர பிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக, ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் வெப்பத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேசத்தில் கடும் வெப்பம் காரணமாக, ரயிலில் பயணித்த தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுக்கவே இந்த ஆண்டு கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. வெப்பமான பகுதிகளில் இந்த ஆண்டு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு சமீப நாட்களாக 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

கடும் வெயிலால் பகலில் வெளியே செல்ல முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ஜான்சியில் ரயிலில் பயணித்த 4 பேர் வெயில் கொடுமை தாங்காமல் உயிரிழந்துள்ளனர்.

கேரளா விரைவு ரயிலில் கோவையை சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேர் வடமாநிலங்களுக்குச் சுற்றுலா சென்றதாகவும், படுக்கை வசதி கொண்ட சாதாரண பெட்டியில் கோவைக்கு திரும்பி வரும்போது ஜான்சி அருகே அதிக வெப்பத்தால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிக வெப்பத்தால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories