இந்தியா

மே. வங்கத்தில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் கட்சியினர் கலவரம்: மோதலில் 4 பேர் பலி!

பா.ஜ.கவினர் அனுமதியின்றி பேரணி நடத்திய போது பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மே. வங்கத்தில் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் கட்சியினர் கலவரம்: மோதலில் 4 பேர் பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிக இடங்களை வென்று 2வது இடத்தை பிடித்துள்ளது. பாஜக தேர்தல் பேரணியிலிருந்து நேற்றைய தினம் வெற்றிக்கொண்டாட்ட பேரணி முதல் தொடர்ந்து வன்முறையை நிகழ்த்தி வருகின்றனர்.

நேற்றையதினம் 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இருவருக்கும் முற்றிய இந்திரா மோதலில் பா.ஜ.க கட்சியின் தொண்டர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சயந்தன் பாசுவும் கூறியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொண்டரை பா.ஜ.கவினர் கத்தியால் குத்தி கொன்றதாக அந்த மாநில அமைச்சர் ஜோதிபிரியோ முல்லிக் தெரிவித்தார்.

இந்த வன்முறை சம்பவத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்துடன் வாழுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories