இந்தியா

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி : யு.ஜி.சி அறிவுறுத்தல்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 21-ல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சி : யு.ஜி.சி அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென நாட்டின் அனைத்து பல்கலை துணைவேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி ) அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி அணைத்து துணைவேந்தர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், "ஜூன் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்துள்ளது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது " இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச யோகா தினத்தன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்டமான யோகா தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 30,000 பேர் கலந்து கொள்வார்கள் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories