இந்தியா

தண்ணீர் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு : மத்திய பிரதேச அரசு உத்தரவு!

மத்திய பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால் குடிநீர் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தண்ணீர் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு : மத்திய பிரதேச அரசு உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடுமுழுவதும் முன்பு இல்லாத வகையில், இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் நிலத்தடியில் நீரும் இல்லாமல் தண்ணீர் பஞ்சத்தால் பல்வேறு மாநில மக்கள் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் டேங்கர் லாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போட அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது.

ஏனெனில், மத்திய பிரதேசத்தின் இந்தூர், பன்னா என பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக, காங்கிரஸ் அரசுதான் வறட்சிக்கு காரணம் என பா.ஜ.க பொய் பரப்புரை செய்து வருகிறது.

இதற்கு பதிலளித்துள்ள நிர்வாகத்துறை அமைச்சர் ஜெய்வர்தன் சிங், தண்ணீர் விநியோகிக்கும் போது, பொதுமக்களிடையே மோதல் போக்கு நிலவுவதால் சட்டம் ஒழுங்கை காப்பதற்காகவே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தஞ்சையில் குடிநீர் பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories